By  June 30, 2015

Wife Carrying Championship


மனைவியை சுமந்து ஓடும் நூதன போட்டி அமெரிக்காவில் ஆண்டுதோறும் மனைவியை தோளில் சுமந்தபடி தடைகளை தாண்டி ஓடும் நூதன போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான ஜோடிகள் பங்கேற்றன. இதில் தாஸ்கி – கிறிஸ்டினா என்ற ஜோடி வென்றது. இது இவர்கள் இத்தகைய போட்டிகளில் பெற்ற 4-வது வெற்றியாகும். இந்த போட்டியில் பங்கேற்ற ஜோடிகள் சேற்றில் விழுந்து புரண்டு எழுந்து ஓடிய காட்சி வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in: Entertainment